வக்காத்துக் குளமும், என் முதல் இலக்கிய பேச்சும்.
ஹனீஸ் முஹமட்
நம்மளையும் மதித்து முதல் தடவையாக பேச கூப்பிட்டாங்களே என்று குறுகிய காலத்தில் தாயார்செய்து தெத்தி, தாவி, தவண்டு போகும்போது இன்னொராளையும் கையில் பிடித்து கூட்டிட்டு போங்க என்று சொன்னால் எப்படி இருக்கும். அது போல,
முதற்தடவையாக பேசும்போது இறுதியில் பேசுவதே பெரிய விடயம், முன்னால் பேசியவர்கள் எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள்.
அதுக்குள்ள ஒரு இடவு எடுத்து,
அதையும் தாண்டி பேச ஆரம்பித்தால்
Mic கழன்று விழுந்தது, சரி என விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தால் அதான் சொல்ல தொடங்கியது. அது முடிந்ததும் பேச ஆரம்பித்தால் Mic வேலை செய்யவில்லை,
அதைச் சரி செய்து பேசிட்டு இருக்கும் போது குறைந்தது ஐந்து தடவையாவது Mic குடைசாய்ந்து விழுந்தது.
என்னடா கொடுமை சரவணா இது, நமக்கு வந்த சோதனை. நானே இடறி இடறி விழுந்து பேசுகிறேன் இந்த Mic எண்ணெயை வாளி வாளியாக ஊத்துகிறதே என்ற பதட்டத்துடன் எழுதிய குறிப்புக்களின் ஒரு பகுதியை விட்டுவிட்டு எப்படியோ பேசி முடிந்தால் போதுமென்று ஒரு வழியா முடிச்சிட்டு ஓடி வந்துட்டேன்.
நீண்ட காலத்திற்கு பின் நல்லதொரு மொட்டைமாடி ஒன்றுகூடல்.
எழுத்தாளர் றஷாக் அவர்களின் வக்காத்துக்குளம் பற்றிய அபரீதமான பார்வையும் பேச்சும்.
Moosa Vijily யின் குரல் கம்பிரம்.
குளு குளு என்று வீசிய தென்றல் காற்றும் நல்லதொரு மனநிலையை தந்தது.
என்ன நானும் Mic உம் நிகழ்வை சொதப்பி விட்டமோ என்று மனம் வருடுகிறது.
நேரடி நிகழ்வின் பதிவுசெய்யப்பட்ட காட்சியின் இணைய முகவரி பின்னூட்டத்தில் இருக்கிறது.
வக்காத்துக்குளம் குறும் நாவலை Fathima Book Centre இல் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment