வக்காத்துக்குளத்தில் இடம் பெற்ற என்,........
என்னுரை
00
ஒரு பசுமைக் கிராமத்தில் வாழ்ந்து, பின்னர் புலம் பெயர்ந்து, மீண்டும் அந்தப் பசுமை கிராமத்தைத்தேடி வந்து, அதைக் காணாமையால் ஏமாற்றத்தால் வெம்புகிற மனநிலை மிகக்கொடிது..
1960 களில், வக்காத்துக்குளம் என்கிற பசுமைக்கிராமத்தில் வாழ்ந்த பால்ய சிநேகிதர்கள் சம்பந்தப்பட்ட பச்சை வீழ்படிவுகள் இங்கே புதினம் ஆகியுள்ளது..
2016 இல் அக்கினிக்குஞ்சு இணையம் நடத்திய அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டியில் 3ஆம் பரிசு பெற்ற இந்நாவலை,
என் இனிய நண்பர் ஏறாவூர் சப்ரி அவர்களின் கஸல் பதிப்பகம் ஊடாக வெளிக் கொணர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்..
இதற்கு அருமையான ஒரு உரை எழுதிய சகோதரி கிண்ணியா பாயிஷா அலி அவர்களுக்கும், அக்கினிக்குஞ்சு இதழ் ஆசிரியர் யாழ்.பாஸ்கர்,.......ஆகியோருக்கும் என் அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முக்கியமாக, இக்குறுநாவலை எழுத்துலக பிரம்மா எஸ்.பொ. அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதில் பெரிதும் உவகையடைகிறேன்...
ஆர்.எம்.நௌஷாத்.
185/2 பழையசந்தை வீதி
சாய்ந்தமருது.1
0774781250
2021.04.16
No comments:
Post a Comment