Thursday, September 22, 2022

காண்டீபா இளங்கோவன்


 தீரன் ஆர்.எம்.நௌஸாத்தின் "வக்காத்துக்குளம்"

காண்டீபா இளங்கோவன்

சில கதைகள் நமது சிறுவயது நினைவுகளை திரும்பக்கொண்டுவந்து ஒருவித Nostalgic feelingஜ உண்டுபண்ணும். அந்த அழகிய சிறுவயது நாட்கள் இனி திரும்பக்கிடைக்காது என்கிற ஏக்கத்தை இந்த புத்தகத்தை வாசித்து முடிய உணரலாம்.


வெளிநாட்டில் நீண்டகாலம் வசித்து பழைய நினைவுகளை மீட்ட சொந்த ஊருக்கு வந்து தான் ரசித்த,தான் புழங்கிய அந்த அழகிய ஊரின் அமைப்பு தற்போது அறவே இல்லை என்று ஏங்குவதுதான் கதையின் கருவே.


சொந்தஊரை விட்டு நிரந்தரமாகவோ நெடிய காலத்திற்கோ நீங்கிச்செல்லும் நிலைப்பாடு உள்ளவர்களுக்கு இந்த வக்காத்துக்குளம் ஒரு திருப்புமுனையாகக்கூட அமையலாம் ♥


இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்திய நண்பர் Mohamed Sabryக்கு நன்றிகள் 🙏

Tuesday, July 12, 2022

பின்னூட்டங்கள்

 

  • அ.வா.முஹ்சினின் முகநூல் கட்டுரைக்கான பின்னூட்டங்கள் 


  • Lafir Mahmood
    நாவலும், விமர்சனமும் ஒன்றை ஒன்று போட்டிபோடுகின்றன.
    2
  • R.M. Nowsaath
    ஆஹா, முற்றிலும் பிறிதான ஒரு கோணத்திலிருந்து நாவலை பார்த்திருக்கிறீர்கள்..மிக்க நன்றிகள் முஹ்சீன் சேர்..உங்கள் வேலைப்பழுக்களுக்கு மத்தியில் வாசித்து, கருத்து இட்டமைக்கு...சகோதரி Ashrafa Noordeen க்கும் நன்றிகள்..
    3
  • மருதூர் ஜமால்தீன்
    மிக அருமையான விமர்சனம்
    பாராட்டுக்கள்
    2
  • Aaliya Aaliya
    அருமை.
    வேறுபட்ட கோணம் ஒன்றில் நாவலையும்,அதன் பாத்திர வார்ப்புகளையும் அணுகி இருக்கிறீர்கள்.வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கி இப்படி நூல்கள் தொடர்பில் எழுதுங்கள் சகோதரர்.
    புதிய திசை நோக்கிய வாசிப்புக்கும், எழுத்திற்கும் எங்களை ப் போன்றவர்களையும் அது கொண்டு செல்லும்
    • Like
    • Reply
    • 1h