Thursday, December 23, 2021

அனீஷா மரைக்காயர்










 பசுமை நினைவுகளை அசைப்போடும்   வக்காத்து குளம்

அனீஷா மரைக்காயர் என்ற ரியாஸ்

( அத்தர். சிறுகதை நூலின் ஆசிரியர். சிங்கப்பூர்


 பல ஆண்டுகளுக்கு பின் கனடாவிலிருந்து சொந்த ஊர் திரும்பும் சதக்கா, தனது நண்பர்களை தேடியலைகிறான். வெயிலிலும், பொழுதிலும் மணிகணக்கில் மிதந்த வக்காத்து குளம் காங்கீரிட் கட்டிடங்களாக மாறி நிற்கிறது. சொந்த ஊரில் தனது நேசத்துக்குரிய குளத்தையும், மீன்களையும், குருவிகளையும், நண்பர்களையும் காணாது துடிக்கிறான். வெறும் ஐம்பது பக்கங்களே இருக்கும் இக்குறுநாவலை படித்ததும் அவ்வப்போது கடும் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் வேளச்சேரி நினைவுக்கு வந்தது. இருபது முப்பது நீர்நிலைகளுக்கு மேல் இன்று வளர்ச்சியடைந்த சென்னை வேளச்சேரி காங்கிரீட் காடுகளாக வளர்ந்து நிற்கிறது. எத்தனையோ ஊர்களில் இரவோடு இரவாக குளம், குட்டை ஆக்ரமிக்கப்பட்டாலும் அதன் பசுமையான நினைவுகளை அபகரிக்க முடியுமா? 

 இதன் ஆசிரியர் சேர் தீரன் நவ்சாத், காக்கா K S Mohammed Shuaib எனக்கு அறிமுகம் செய்து வைத்த கிழக்கிலங்கை எழுத்தாளர் அவர். நான் சிறுகதைகள் எழுதலாம் என முடிவெடுத்த போது தீரன் சேர் எழுதிய  ‘வெள்ளிவிரல்’ கதைபோல் ஒரு நய்யாண்டி கதைவிட்டால் போதும் என தோன்றியது. 

  வக்காத்து குளம் பசுமை நினைவுகளை அசைப்போடும் சதக்கா, ஊர் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு கீழே சிதிலங்களாக மாறிப்போன தனது பால்யத்தை தேடியலைகிறான்.  இந்த குறுநாவலில் வரும் சாந்தமாமா, மாலைவெள்ளி, சுபைதா, குண்டப்பன், சண்முகம் நம்முடைய பால்ய காலத்தில் நம்மோடு விளையாடிய நண்பர்கள்.நாவலின் பலம் என்னவென்றால் பொய்யும் புரட்டுமாய் லெளகீகத்தில் பெரியவர்களாகிவிட்ட நம்மை பார்த்து மீண்டும் எப்போது கள்ளங்கபடமில்லா சிறுவர்களாக போகிறீர்கள் என கேட்கும் கேள்வி ? ஆங்காங்கே  சிறுவர்களின் விளையாட்டு பாடல்கள், ஒவ்வொரு இரண்டு பக்கங்கங்களும் நடுவில் வருகிறது.  நம் சிறுவயதில் பாடக்கூடிய பாடல்கள் எல்லாம் இப்போது நினைத்துப்பார்த்தால் பொருளற்ற பாடல்களாக நாம் உணர்வதுண்டு. 

   பால்யத்தில் எனது தெருவில் இருந்த அக்காவோடு சத்திரம் போய் திரும்பி வரும்போது , மைய்யத்தாங்கரையை பார்த்து ஒருமுறை கைநீட்டிவிட்டேன். ஒரு தலைப்பிள்ளை அப்படி செய்யக்கூடாது ! நீயேன் அப்படி செய்தாய் என அழ ஆரம்பித்துவிட்டாள். சந்தையில் பிசுபிசுத்த மீன் கவுச்சி கையோடு எனது பத்துவிரலையும் வாயில் நுழைத்து கடிக்க சொன்னாள் !  அதுதான் அஅதற்கு பரிகாரம் ! நானும் மைய்யாதங்கரையை நோக்கி வாயுக்குள் போண்டாவை நுழைப்பது போல் விரல்களை அழுதுக்கொண்டே நுழைத்தேன். வயதுக்கு வந்த பின்பு அத்தகைய செயலெல்லாம் பொருளற்றதாகவும் சிரிப்புக்குள்ளாதாகவும் மாறிவிடுகிறது. 

  இக்கதையில் சிறுவர்கள் சதக்கா, மாலைவெள்ளி,பார்வதி, சாந்தமாமா  பாடும் பாடல்கள் ஒவ்வொன்றும் கதையின் போக்கில் கண்ணாடியில் வழியும் நீர் போல் என்றாலும், கதையின் முடிவில் புத்தவிகாரையில் வரிசையாய் கண்களை மூடி நடக்கும் புத்த துறவிகளுக்கு நடுவே டிவிஸ்டாக பாடப்பெறும் ஒரு சிறுவர் பாடல் , அந்த பாடல் எழுபது வயதாகிவிட்ட சதக்காவிற்கு ஒரு தரிசனத்தையும் கண்டடைதலையும் வாழ்வின் முழு அர்த்தத்தையும் தருகிறது. ஒரே மூச்சில் இழுத்துக்கொண்ட காற்றைப்போல அந்தப்பாடல் முழு வக்காத்துகுளத்தையும் தரிசனமாக படிக்கின்ற நமக்கும் ஒரு சித்திரத்தை சேர்த்தே தருகிறது. 

   நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போது பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது, ‘அரப்படம் திரப்படம் ஆரியமங்கள கோயில் பருப்பா 12 ! தெக்கு தெருவுல காது குத்தின வாழப்பழத்த யார் எடுத்தா ! ‘  இப்படி பலபாடல்களை தூரம் தெரியாமலிருக்க பாடிக்கொண்டே சொல்வோம். வழியில் வரும் நாய் கோழிகள், வீட்டு கூரையில் மீது கல்லெறிந்து பாடிய பாடல்கள், இதுவரை பொருளற்றதகாவே எனக்கு தோன்றியது. வாழ்வின் சூட்சுமமும் தத்துவமும் புரியும் கணத்தில் அந்த வாழைப்பழத்தை யார் எடுத்தார் என்று புரிந்துவிடுமோ என்னவோ தெரியவில்லை. 

வெளியீடு : Ghazal Publications

Wednesday, December 22, 2021

மருதநிலா நியாஸ்

பல படிநிலைகளைக் கொண்ட ஒரு வாழ்க்கைக் கோலம் ,வக்காத்துக்குளம்

மருதநிலா நியாஸ்





 

Wednesday, December 15, 2021

வியூகம் TV

வக்காத்துக்குளம் வெளியீட்டுவிழா... 

நேரலை..வியூகம் TV

https://www.facebook.com/VIYUHAM/videos/895220231433378/






மருதூர் ஜமால்தீன்

 

வக்காத்துக்குளத்துக்கு ஒரு வாழ்த்து 

மருதூர் ஜமால்தீன்


வக்காத்துக் குளம்

வளரும் தலைமுறைகள்

மிக்கோர் கிராமத்துள்

மகிழ்ந்திடும் ஆவணங்கள்


முன்னோர் வாழ்வும்

முழுமைக் கிராமமும்

பின்னோர் அறிந்திடப்

பிரசவித்த குறுநாவல்


கட்டிடக் கலைகலைகள்

கண்பறித்து நின்றாலும்

தொட்டுணரக் கிடைத்தோர்

தொலைக்காத கிராமங்கள்


தீராத் தாகத்துடன்

தொடர்ந்தழைத்து

ஆராத்தியெடுக்கவைக்கும்

அழியாத மண்வளச்சொல்


தீரர் படைத்தளித்துத்

தந்திட்ட நாவல்கள்

சோரம் போகாத

சமுதாயச் சிந்தனைகள்


படிப்போம் பகிர்வோம்

படித்திடத் தூண்டிடுவோம்

நடிக்கும் உலகை

நாமதற்குள் கண்டிடலாம்


மேலும் வெளிவரட்டும்

வாழ்த்துவோம்0

0

தீராக் கதைசொல்லி

வல்லமை தாராயோ, வெள்ளிவிரல், தீரதம் ஆகிய சிறுகதை தொகுதிகளையும், நட்டுமை, கொல்வதெழுதுதல் 90, ஆகிய நாவல்களையும் தந்த ஆர்.எம்.நௌஷாத் எழுதிய வக்காத்துக்குளம் கிடைக்கப் பெற்றேன்...

நம் மண்ணின் ஒரு 'தீராக் கதைசொல்லி' தீரனுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்

கவிஞர் கதிர்

வக்காத்துக்குளம்...தன்னையே ஓவியமாக வரைந்து முடித்த தூரிகை

 கவிஞர் கதீர்

0

கதைஞன்,கவிஞன் ஆர் எம் நௌஸாத் அவர்களின் புதிய படைப்பு "வக்காத்துக் குளம்"

தன்னையே ஓவியமாக வரைந்து முடித்த தூரிகை கொண்டு தன்னை மறைத்தல் என்பது கதையின் உச்சம்.

1986 களில் வக்காத்துக் குளம் எனக்கும் பரிச்சையமாகிய ஓரிடம்.

ஒளி பட்டுத் தெறிக்கும் நாலைந்து வண்ணான் கற்கள்

குளத்தில் ஊறப் போட்டிருக்கும்  சாக்குகளை வெட்டி அதனுள் இருக்கும் முளை நெல்லை குடிக்கத் திரியும் ஆமைக் கூட்டங்கள், கொக்குகள், பசும் சமவெளி

குளத்தில் லயித்துக் கிடக்கிறேன்.


-கதீர்-

கவிஞர். ஜமீல்

 இப்போது கஸல் பதிப்பகத்தின் வெளியீடுகளை நண்பர்கள் என்னிடம் பெற்றுக் கொள்ள முடியும்

வக்காத்துக் குளம் குறு நாவல் 

இலங்கை விலை 200 ரூபா

வெள்ளாவி நாவல்

இலங்கை விலை 500 ரூபா

தொடர்புகளுக்கு  

ஜமீல் 

0779689392

ஹனீஸ் முஹமட்

 வக்காத்துக் குளமும், என் முதல் இலக்கிய பேச்சும்.

ஹனீஸ் முஹமட்


நம்மளையும் மதித்து முதல் தடவையாக பேச கூப்பிட்டாங்களே என்று குறுகிய காலத்தில் தாயார்செய்து தெத்தி, தாவி, தவண்டு போகும்போது இன்னொராளையும் கையில் பிடித்து கூட்டிட்டு போங்க என்று சொன்னால் எப்படி இருக்கும்.  அது போல,

முதற்தடவையாக பேசும்போது இறுதியில் பேசுவதே பெரிய விடயம், முன்னால் பேசியவர்கள் எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள். 

அதுக்குள்ள ஒரு இடவு எடுத்து,

அதையும் தாண்டி பேச ஆரம்பித்தால் 

Mic கழன்று விழுந்தது, சரி என விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தால் அதான் சொல்ல தொடங்கியது. அது முடிந்ததும் பேச ஆரம்பித்தால் Mic வேலை செய்யவில்லை, 

அதைச் சரி செய்து பேசிட்டு இருக்கும் போது குறைந்தது ஐந்து தடவையாவது Mic குடைசாய்ந்து விழுந்தது. 

என்னடா கொடுமை சரவணா இது, நமக்கு வந்த சோதனை. நானே இடறி இடறி விழுந்து பேசுகிறேன் இந்த Mic எண்ணெயை வாளி வாளியாக ஊத்துகிறதே என்ற பதட்டத்துடன் எழுதிய குறிப்புக்களின் ஒரு பகுதியை விட்டுவிட்டு எப்படியோ பேசி முடிந்தால் போதுமென்று ஒரு வழியா முடிச்சிட்டு ஓடி வந்துட்டேன்.

நீண்ட காலத்திற்கு பின் நல்லதொரு மொட்டைமாடி ஒன்றுகூடல். 

எழுத்தாளர் றஷாக் அவர்களின் வக்காத்துக்குளம் பற்றிய அபரீதமான பார்வையும் பேச்சும்.

Moosa Vijily யின் குரல் கம்பிரம்.

குளு குளு என்று  வீசிய தென்றல் காற்றும் நல்லதொரு மனநிலையை தந்தது.

என்ன நானும் Mic உம் நிகழ்வை சொதப்பி விட்டமோ என்று மனம் வருடுகிறது.

நேரடி நிகழ்வின் பதிவுசெய்யப்பட்ட காட்சியின் இணைய முகவரி பின்னூட்டத்தில் இருக்கிறது.

வக்காத்துக்குளம் குறும் நாவலை Fathima Book Centre இல் பெற்றுக்கொள்ளலாம்.



Friday, November 12, 2021

Rifca Azmi


வெளியீட்டு நிகழ்வில் சிற்றுண்டி கொடுத்த ஏனம்.
Sponsored by Rifca Azmi



 

 

Thursday, November 11, 2021

படங்கள் செய்திகள்


நிகழ்வுக்கு ஒரு வாரத்துக்கு முன் கஸல் பதிப்பக குழுவினருடன்



         மாற்றப்பட்ட பதாதை


             முகநூல் அழைப்பு


               வீரகேசரி




         வெளியீட்டு விழா பதாதை


     அடுத்த நாள்  மு.இ.உமர்                   அலி    நூல் பெறும்போது

 
அக்கரைப்பற்று புத்தக காட்சியில் பாத்திமா நூல் விற்பனைக் கூடத்தில் வக்காத்துக்குளம் நூல் காட்சிப்படுத்தப்பட்டது

புகைப்படங்கள்


ஏ.பீர்முகம்மது சேர்


பெருவெளி, அப்துல் ரஸ்ஸாக்


மனைவி றிபாயா

Modern painters..சஜ்ஜாத்


              றிபாயா.. சப்ரி


              உவைஸ் முகமட்
            

                P. மோகனதாஸ்


          ஷருக் அப்துல் அஸீஸ்


               வியூகம் ஜனூஸ்


                  ஷிப்லி அஹமட்


                 மருதநிலா நியாஸ்


                கவிஞர் ஜமீல்


                          பஸ்ரி


                    ரிஸ்வியு நபீல்


                    மருதூர் ஜமால்தீன்



                      கவிஞர் கதிர்


                 அலறி  றிபாஸ்



                ஓட்டமாவடி அரபாத்


                   ஆர்.எம்.ஹனீஸ்